மகளிர் பிக் பாஷ் போட்டியின் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கெளர் தேர்வு

ஆஸ்திரேலியாவின் டபிள்யூபிபிஎல் போட்டியில், இந்த ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கெளர் தேர்வாகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மகளிர் பிக் பாஷ் லீக் (டபிள்யூபிபிஎல்) போட்டியில் இந்த வருடம் 8 இந்திய வீராங்கனைகள் விளையாடுகிறார்கள். ஹர்மன்ப்ரீத் கெளர், ஸ்மிருதி மந்தனா தவிர மற்ற அனைவரும் முதல்முறையாக இப்போட்டியில் பங்கேற்றார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி 2-ம் இடம் பெற்றதால் இந்திய வீராங்கனைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. 

தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா (சிட்னி தண்டர்), தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா, இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் (சிட்னி சிக்ஸர்ஸ்), பேட்டர்கள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கெளர் (மெல்போர்ன் ரினகேட்ஸ்), விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ் (ஹோபர்ட் ஹரிகேன்ஸ்), லெக் ஸ்பின்னர் பூனம் யாதவ் (பிரிஸ்பேன் ஹீட்) ஆகியோர் 2021 டபிள்யூபிபிஎல் போட்டியில் பங்கேற்றார்கள். இம்முறை வெளிநாட்டு வீராங்கனைகளில் இந்தியர்கள் தான் அதிக அளவில் இடம்பெற்றார்கள்.

மெல்போர்ன் அணிக்காக விளையாடி வரும் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கெளர், 2021 டபிள்யூபிபிஎல் போட்டியின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார். டபிள்யூபிபிஎல் போட்டியில் சிறந்த வீராங்கனையாகத் தேர்வாகும் முதல் இந்தியர் என்கிற பெருமையை அடைந்துள்ளார். இந்திய டி20 கேப்டனான ஹர்மன்ப்ரீத் கெளர், இந்த வருடப் போட்டியில் 399 ரன்களும் 15 விக்கெட்டுகளும் எடுத்தார். மெல்போர்ன் அணியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனையாகவும் அவர் உள்ளார். மூன்று அரை சதங்கள் எடுத்த கெளர், மூன்று முறை சிறந்த வீராங்கனைக்கான விருதுகளைப் பெற்றார். 

மெல்போர்ன் அணி நாக் அவுட் சுற்றில் விளையாடி வருகிறது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நவம்பர் 27 அன்று நடைபெறும் இறுதிச்சுற்றுக்கு மெல்போர்ன் அணி தகுதி பெறும்.

ஹர்மன்ப்ரீத் கெளர்: டபிள்யூபிபிஎல் 2021 

12 ஆட்டங்கள்

பேட்டிங்: 11 இன்னிங்ஸ், 399 ரன்கள், சராசரி – 66.50, ஸ்டிரைக் ரேட் – 135.25
பந்துவீச்சு: 12 இன்னிங்ஸ், 15 விக்கெட்டுகள், சராசரி – 20.40, எகானமி – 7.46 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>