மகளுக்காக தாயாக மாறிய நடிகர் சதீஷ்: வெளியான புகைப்படம்: ஏன் தெரியுமா ?

 

நடிகர் சதீஷ் தனது மகளுக்காக தாயாக மாறியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ பகிர்ந்துள்ளார். 

நகைச்சுவை நடிகர் சதீஷ் ‘நாய் சேகர்’ என்ற படத்தின் மூலம் கதாநாயாகனாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா நடிக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார். 

இதன் ஒரு பகுதியாக நடிகர் வடிவேலுவும் நாய் சேகர் என்ற பெயரில் தனது படத்தை அறிவிக்க சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து தங்கள் முன்னதாகவே படத்தை எடுத்து முடித்துவிட்டதாகவும் இனி பெயரை மாற்ற முடியாது எனவும் நடிகர் சதீஷ் பட தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க | ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…: புதுப்பட அறிவிப்பை வெளியிட்ட சூர்யா

இதனையடுத்து நடிகர் வடிவேலு நடிக்கும் படத்துக்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று பெயர் மாற்றப்பட்டு முதல்பார்வை போஸ்டர் வெளியானது. 

இந்த நிலையில் நடிகர் சதிஷ் பெண் வேடத்தில் தனது மகளை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அம்மா வெளியே சென்றிருக்கும் போது தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை எழுந்து அம்மா வேண்டும் என்று அடம்பிடிக்கும் போதெல்லாம்…இனி கேப்ப என்று குறிப்பிட்டுள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>