மகள் மற்றும் பேத்தியுடன் நடிகர் விஜயகுமார்: அச்சு அசல் அம்மாவைப் போல மகள்

நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியினரின் மூன்றாவது மகள் ஸ்ரீதேவி சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த ரிக்சா மாமா, அம்மா வந்தாச்சு உள்ளிட்ட படங்கள் மிக பிரபலம். 

கதாநாயகியாக தமிழ், தெலுங்கில் நடித்துவந்த ஸ்ரீதேவி, திருமணத்துக்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்ப புகைப்படங்களை நடிகை ஸ்ரீதேவி அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். 

இதையும் படிக்க | கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்புத் தள புகைப்படம் வைரல்

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி தனது அப்பா விஜயகுமார் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை ஸ்ரீ தேவி குழந்தையாக எப்படி இருந்தாரோ, அதே போன்று அவரது மகளும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>