‘மகான்’ திரைப்படத்தின் ’ரிச் ரிச்’ பாடல் நாளை (பிப்.5) வெளியீடு

விக்ரம் – துருவ் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படத்தின் ரிச் ரிச் பாடல் நாளை வெளியாக உள்ளது.

நடிகர்கள் விக்ரம்-துருவ் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படத்திலிருந்து சூரையாட்டம், எவன்டா எனக்கு கஷ்டடி போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதையும் படிக்க | கெட்ட வார்த்தை பதிவிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்வின் குமார்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகின நிலையில் படத்தி ரிச் ரிச் பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>