’மகான்’ திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ்: வெளியீடு குறித்து புதிய அறிவிப்பு

விக்ரம், துருவ் நடித்துள்ள மகான் திரைப்படத்திற்கு தணிக்கை துறையினர் யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 

ஜகமே தந்திரம் படத்திற்குப் பின் விக்ரம், துருவ் நடிக்கும் மகான் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஆக்சன் பாணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்டோரும்  நடித்துள்ளார்கள். 

தற்போது இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்து தணிக்கைக்காக காத்திருந்த நிலையில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மகான்  படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 2022, ஜனவரியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>