‘மதுவந்தி’ என்றொரு ராகமிருக்கிறது தெரியுமா?

000000_divine_music

நட்கர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தியைத் தெரியும் தானே? அவரது சமீபத்திய நேர்காணலொன்றில் தனது பெயருக்கான காரணத்தை அவர் விளக்கினார். மதுவந்தி என்றால் அது ஒரு ராகத்தின் பெயராம். அது ஒரு ஹிந்துஸ்தானி ராகம் என்கிறார். இந்த ராகம் 59 வது மேளகர்த்தாவான தர்மவதியின் ஜன்யம் ஆகும். இந்த ராகத்தை ‘துக்கடா’ என்றும் அழைப்பார்கள். ஜனரஞ்ஜகமான பாடல்களுக்கு அதிகமாக பயன் படுத்துவார்களாம். மது என்றால் தேன் என்றொரு பொருளிருக்கிறதில்லையா? அதற்கேற்ப இந்த ராகத்தைக் கேட்கக் கேட்க காதில் தேனாறு பாயும் என்கிறார்கள். 

மதுவந்தி ராகத்துக்கான வாத்தியஸ்வரங்கள்…

இதன் வாத்தியஸ்வரம்…

மதுவந்தி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

மதுவந்தி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

ஆரோகணம்: ஸ க ம ப நி ஸ
அவரோகணம்: ஸ நி த ப ம க ரி ஸ

இந்த ராகத்தில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்…

  • கண்ட நாள் முதல் (N.S.ராமசந்திரன்)
  • நரஜன்ம பந்தாகே (புரந்தர தாசர்)
  • எப்படி நான் அழைப்பேன் (சிதம்பரநாதன்)
  • நின்னையே ரதி (பாரதியார்)
  • அனுமனை அனுதினம் நினை மனமே – ராகமாலிகை
  • நினையே -தில்லானா (லால்குடி ஜெயராமன்)
  • தில்லானா (கணேஷ் & குமரேஷ்)

திரையிசைப் பாடல்கள்…

நந்தா என் நிலா – நந்தா என் நிலா – தட்சிணாமூர்த்தி.

https://youtube.com/watch?v=snEadGGWyyU

ஹலோ மை டியர் – மன்மத லீலை – எம். எஸ். விஸ்வநாதன்

  • வானவில்லே – ரமணா – இளையராஜா
  • கனா காணும் – 7ஜி ரெயின்போ காலனி – யுவன் ஷங்கர் ராஜா

<!–

–>