மனைவியுடன் விவாகரத்தை அறிவித்த இசையமைப்பாளர் டி.இமான்

 

தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். தொடர்ந்து இசையின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வந்தார். இருப்பினும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 

இந்த நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான மைனா படம் டி.இமானுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து கிராமத்து பின்புலத்தில் உருவாகும் படம் என்றால் அந்தப் படத்துக்கு இமானின் இசை தான் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தை ரசிகர்களிடையே உருவாக்கினார். 

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் இவரது இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 

இதையும் படிக்க | அறிவிக்கப்பட்டு வெளியாகாத சூர்யா படம்: ரசிகர்கள் ஏமாற்றம் – என்ன நடந்தது?

இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவியுடன் விவாகரத்தை அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரத் தனது ட்விட்டர் பக்கத்தில், நானும், மோனிகா ரிச்சர்டும் விவாகரத்து பெற்றோம். நாங்கள் மனப்பூர்வமாக பிரிகிறோம். நலம் விரும்பிகள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்களை இதனை கடந்து போக உதவுங்கள்.  உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>