மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்!

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகக் கருதப்படும் நாவல் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. 

நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பி1, பி2, பி5 ஆகிய வைட்டமின்களும் உள்ளன. 

அடர் ஊதா அல்லது நீல கறுப்பு நிறத்தில் இருக்கும் இவற்றை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இதன் விதைப் பகுதியை அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்று விடும். பழச்சாறும் சாப்பிடலாம். 

இதன் இலையை காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதனால் மாரடைப்பு வருவது குறையும். பெண்கள் இதன் இலைச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட மலட்டுத்தன்மை அகலும். 

இதன் காரணமாகவே இதன் விதை, பழம், இலை, பட்டை என அனைத்தும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. 

மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும். 

நாவல் பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் பசியைத் தூண்டும்.

சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் கோளாறுகளை நீக்கும் வல்லமை உண்டு. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது. செரிமானங்களைத் தூண்டும். 

விதைகளில் அதிக அளவில் புரதம், மாவுச்சத்து மற்றும் கால்சியம் உள்ளது. 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>