'மரைக்காயர்' படம் ஓடிடியில் வெளியாவது எப்போது?: அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் என்கிற மலையாளப் படத்தில் மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். (இந்தப் படம் தமிழில், மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் என்கிற பெயரில் வெளியானது.)

2019-ம் ஆண்டிற்கான சிறந்த தேசிய திரைப்படமாக மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் தோ்வு செய்யப்பட்டது. சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு என மொத்த மூன்று தேசிய விருதுகளை அள்ளியது.

மரைக்காயர் படம் முதலில் 2020, மார்ச் 26 அன்று வெளியாகவிருந்தது. எனினும் கரோனா பரவல் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்தாண்டு ஓணம் வெளியீடாக ஆகஸ்ட் 12 அன்று திரையரங்குகளில் மரைக்காயர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் வெளியிட முடியாமல் போனது. கடைசியாக, டிசம்பர் 2 அன்று  மரைக்காயர் படம் வெளியானது.

இந்நிலையில் படம் வெளியான 2 வாரங்கள் கழித்து டிசம்பர் 17 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் மரைக்காயர் படம் வெளியாகவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>