மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கனவுப் பட டீசர் வெளியானது : மக்கள் நெகிழ்ச்சி

 

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த மாதம் மாரடைப்பால் காலமானார். இளம் வயதில் அவர் மரணமடைந்தது ஒட்டுமொத்த திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இந்த நிலையில் அவரது கனவுப்படமாக கருதப்பட்ட கந்தட குடி என்ற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு திரைக்குவரவிருக்கிறது. 

இதையும் படிக்க | விதிமுறையை மீறி பிக் பாஸில் பங்கேற்ற கமல்: விளக்கம் கேட்கும் அரசு

இந்தப் படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்க, பிரதீக் செட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். அமோங்கவர்ஷா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். டீசரில் நடிகர் புனித் ராஜ்குமாரை கண்ட ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>