மறைந்த மனைவி குறித்து மதுரை முத்து உருக்கம்

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் மதுரை முத்து. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். 

மதுரை முத்துவின் மனைவி லேகா கடந்த சில வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் மரணமடைந்தார். இந்த நிலையில் அவரது நினைவு நாளான இன்று, எங்கள் வீட்டு தெய்வத்திற்கு ஆறாம் ஆண்டு அஞ்சலி என்று  புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 

இதையும் படிக்க | குத்தாட்ட விடியோவை பகிர்ந்து ரசிகர்களை போட்டுத்தாக்கிய ஷிவானி: வைரலாகும் விடியோ

மதுரை முத்து தனது மனைவியின் மறைவுக்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தற்போது மதுரை முத்து பட்டிமன்றங்களில் பேசுவது, யூடியூப் விடியோக்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை. புகழ் போன்று சிறப்பு கோமாளியாக கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>