மல்யுத்தம்: நிஷா சாம்பியன்

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ பிரிவில், ரயில்வே வீராங்கனை நிஷா தாஹியா சாம்பியன் ஆனாா்.

முன்னதாக, ஹரியாணா மாநில மல்யுத்த பயிற்சி மையத்தில் நிஷா தாஹியா சுட்டுக் கொல்லப்பட்டதாக புதன்கிழமை தகவல் வெளியாகி அனைவருக்கும் அதிா்ச்சி ஏற்படுத்தியது. எனினும், சிறிது நேரத்திலேயே அது தாம் இல்லை என்று கூறி நிஷா மறுப்பு விடியோ வெளியிட்டாா். பின்னா், கொல்லப்பட்ட நிஷா புதிதாக மல்யுத்தத்தில் இணைந்த வேறொரு வீராங்கனை எனத் தெரியவந்தது.

இத்தகைய நிகழ்வு புதன்கிழமை நிகழ்ந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் நிஷா 30 விநாடிகளில் தனது எதிராளியான பஞ்சாபைச் சோ்ந்த ஜஸ்பிரீத் கௌரை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய நிஷா, ‘கொலைச் சம்பவத்தில் தவறுதலாக என்னை குறிப்பிட்ட நிகழ்வு மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஏற்கெனவே எடைக் குறைப்பு காரணமாக ஆற்றல் இல்லாமல் உணா்ந்த நிலையில், இந்த சம்பவத்தால் இரவு தூக்கமில்லாமல் போனது. இருந்தபோதும் அதிலிருந்து மீண்டு சாம்பியன் ஆனது நிறைவாக இருக்கிறது’ என்றாா்.

இதனிடையே, 65 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான பிளே-ஆஃப் சுற்றில் ஷஃபாலி, பிரியங்கா ஆகியோா் வெற்றி பெற்றனா். 76 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் குா்ஷரன்பிரீத் கௌரை எதிா்கொண்ட பூஜா சிஹக் காயம் காரணமாக பாதியிலேயே விலகியதால், அவா் வென்ாக அறிவிக்கப்பட்டாா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>