'மாநாடு' படம் ஓடிடி ரிலீஸா?: தயாரிப்பாளர் விளக்கம்: வெங்கட் பிரபு என்ன சொன்னார் தெரியுமா?

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் வருகிற இந்த மாதம் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தனது மகனின் படத்தை வெளியிட விடாமல் சிலர் தடுப்பதாக சிம்புவின் பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். 

இதையும் படிக்க | அதிவேகமாக 1.5 கோடி பார்வையாளர்களைக் கடந்த ’விக்ரம்’ கிளான்ஸ் விடியோ

இந்த நிலையில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக ரசிகர் ஒருவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியைக் குறிப்பிட்டு தகவல் பகிர்ந்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள சுரேஷ் காமாட்சி, ”எங்களுக்கு வெளியீட்டு வேலை நிறைய இருக்கிறது. அதனால் எங்களைக் குறிப்பிட வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார். அதற்கு இயக்குநர் சிரிக்கும் ஸ்மைலியை பதிலளித்துள்ளார். இதன் மூலம் திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | விஜய் சேதுபதி குரல் கொடுத்த ‘கடைசீல பிரியாணி’: ருசிக்கலாமா? திரைப்பட விமர்சனம்

யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் மெகரசைலா படால் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மற்ற பாடல்களும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>