'மாநாடு' பட ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம் : சிம்பு வேடத்தில் இந்த ஹீரோ நடிக்கிறாரா ?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சிம்புவின் திரையுலக வாழ்வில் இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது. 

இந்தப் படத்தின் அனைத்து இந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமை, தெலுங்கில் மொழி மாற்றம் செய்யும் உரிமையை பிரபல தெலங்கு தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதையும் படிக்க | இந்த வருடம் ரஹ்மான் இசையில் வெளியாகவிருக்கும் 5 தமிழ் படங்கள் – என்னென்ன தெரியுமா ?

மாநாடு தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகவிருந்தது. நடிகர் எஸ்.ஜே.சூர்யாவே தெலுங்கிலும் தனது வேடத்துக்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் தெலுங்கில் மாநாடு திரைப்படம் வெளியாகவில்லை. 

சுரேஷ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் பெரும்பாலான படங்களில் வெங்கடேஷ் தான் கதாநாயகனாக நடிப்பார். தமிழில் வெற்றி பெற்ற இறுதிச்சுற்று, அசுரன் ஆகிய படங்களில் வெங்கடேஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மாநாடு பட ரீமேக்கிலும் வெங்கடேஷ் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>