மாநாடு பட வெற்றி விழா: நடிகர் சிம்புவை விமர்சித்த எஸ்.ஏ.சந்திரசேகர்

மாநாடு திரைப்பட வெற்றிவிழாவில் நடிகர் சிம்புவை இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விமர்சித்து பேசியது சினிமாத்துறையினரிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதையும் படிக்க | நடிகர் அஜித் படத்தால் சிக்கல்: நீதிமன்றம் சென்ற எஸ்.ஜே.சூர்யா

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தின் கதாநாயகன் நடிகர் சிம்பு திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

இதையும் படிக்க | திரையுலகில் அடியெடுத்து வைக்கும் யூடியூப் பிரபலம் ரித்விக்: அதுவும் யார் படத்தில் தெரியுமா?

இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகர் சிம்பு கலந்து கொள்ளாதது குறித்து அதிருப்தி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “மாநாடு திரைப்படத்தின் வெற்றி நடிகர் சிம்புவிற்கு மிகப்பெரிய திருப்புமுனை. அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும். ஒரு வெற்றிக்குப் பிறகு முன்பு இருந்ததைப் போலவே இருக்க வேண்டும். அப்போது தான் மற்றொரு வெற்றி கிடைக்கும்” எனக் குறிப்பிட்டு பேசினார்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த விமர்சனம் சினிமாத்துறையினரிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>