'மாநாடு' வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் என்ன தெரியுமா ?

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களையும், விமசகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிம்புவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 

இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம் குறித்து ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறப்பட்டாலும், அது உடனடியாக துவங்கப்படாது என்று கூறப்படுகிறது. 

இதையும் படிக்க | பட்டத்தை மறுத்து ’தல போல வருமா?’ என்பதை நிரூபித்த அஜித் குமார்

இந்த நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தாமதாமானதால், அந்த இடைவேளையில் வெங்கட் பிரபு ஒரு படத்தை இயக்கியுள்ளாராம். இந்தப் படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருத்தி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்தப் படம் அடல்ட் காமெடி என்ற முறையில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>