மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களுடன் புதிய இணையத்தொடர்: ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ள ஹாக் ஐ

மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையத்தொடரான ஹாக் ஐ, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களைத் தயாரிக்கும் மார்வெல் ஸ்டூடியோஸ், 26 சூப்பர் ஹீரோ படங்களை இதுவரை வெளியிட்டுள்ளது. 2008-ல் முதல் படமாக அயர்ன் மேன் படமும் 26-வது படமாக இந்த வருடம் எடர்னல்ஸ் படமும் வெளியாகியுள்ளன. இந்த வருடம் நான்கு இணையத்தொடர்களைத் தயாரித்த மார்வெல் ஸ்டூடியோஸ், அடுத்ததாக ஹாக் ஐ (Hawkeye) என்கிற அட்டகாசமான இணையத்தொடரை வெளியிட்டுள்ளது. ஹாக் ஐ இணையத் தொடரின் முதல் பருவத்தின் இரு பகுதிகள் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளன. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் ஒரு தொடர்ச்சியாக இந்த இணையத்தொடர் உள்ளது. 

ஹாக் ஐ இணையத்தொடர் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களான கிளிண்ட் பார்டன் கதாபாத்திரத்தில் ஜெரிமி ரென்னரும் கேட் பிஷப் கதாபாத்திரத்தில் ஹைலீ ஸ்டீன்ஃபெல்டும் நடித்துள்ளார்கள். முதல் இரு பகுதிகளை ரைஸ் தாமஸ் இயக்கியுள்ளார். 

ஹாக் ஐ இணையத்தொடரின் புதிய பகுதிகள் ஒவ்வொரு வாரத்திலும் புதன்கிழமை அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதான் சிறந்த கிறிஸ்துமஸ் ஆக இருக்கப்போகிறது. ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக என் குழந்தைகளை நியூயார்க்-குக்கு அழைத்துச் செல்லப்போகிறேன்… அப்போதுதான் என்னைக் கொல்ல பல பேர் வந்தார்கள்… என்கிற வசனங்களுடன் சமீபத்தில் வெளியான ஹாக் ஐ இணையத்தொடரின் டிரெய்லர், பரபரப்பான காட்சிகளால் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஹாக் ஐ இணையத்தொடரை பார்க்கத் தயாராகி விட்டீர்களா? 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>