மாறனுக்காக இணைந்த அசுரன் கூட்டணி – தனுஷ் பாடிய முதல் பாடலை அறிவித்த ஜி.வி.பிரகாஷ்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படம்  ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மாறன் துவக்க பாடலின் ஒலி கலவை பணிகள் நடைபெற்று வருகிறது. விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளார். மேலும் அறிவு இந்தப் பாடலின் ராப் பாடியுள்ளார். என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க | பொன்னியின் செல்வனுக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தின் கதாநாயகன் இவரா?

மாறன் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, ஸ்மிருதி வெங்கட் சமுத்திகரகனி, கிருஷ்ண குமார், மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>