'மாஸ்டர்' தயாரிப்பாளருடன் இணையும் 'ரைட்டர்' இயக்குநர் – பா.ரஞ்சித் அறிவிப்பு

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் நடித்து கடந்த வாரம் திரையரங்கில் வெளியான படம் ‘ரைட்டர்’. ஃபிராங்க்ளின் ஜேக்கப் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 

இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், ”ரைட்டர் படத்துக்கு விமர்சகர்கள் மற்றும் மக்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பினால் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படத்தை ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கவிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க | ‘வலிமை’ டிரெய்லர் இன்று வெளியாகிறது ! – கை கொடுக்குமா வியாழக்கிழமை சென்டிமென்ட்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படத்தை லலித் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக சேவியர் பிரிட்டோவுடன் இணைந்து தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>