மீண்டும் இணையும் 'பருத்திவீரன்' கூட்டணி: இயக்குநர் அமீரின் அடுத்தப் படம் அறிவிப்பு

 

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ரமேஷ் கிருஷ்ணன் இயக்கும் படத்தில் இயக்குநர் அமீர் நடிக்கவிருக்கிறார். 

இயக்குநர் அமீர் இதுவரை 4 படங்களை இயக்கியிருக்கிறார். அதில் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் ஆகியவை தமிழின் கிளாசிக் படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளன. மேலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாகவும் இருக்கின்றன. 

இதனையடுத்து அமீர் இயக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்த நிலையில் இயக்குநர் அமீர் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அமீருடன் ஆர்யாவின் தம்பி சத்யா. சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண், தயா செந்தில்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இதையும் படிக்க | தனுஷின் ‘கலாட்டா கல்யாணம்’: ரஹ்மான் இசையில் வெளியான விடியோ பாடல்

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கின்றார். இந்தப் படத்துக்காக யுவன் இசையில் சினேகன் எழுதியுள்ள ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தை அதர்மம், பகைவன் ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணன் இயக்குகிறார்.  

இந்தப் படத்துக்காக நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குநர் அமீர், யுவன் ஷங்கர் ராஜா, ராம்ஜி, சினேகன் கூட்டணி இணையவுள்ளனர்.  இந்தப் படத்தை அமீர் ஃபிலிம் கார்பரேசன் மற்றும் ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>