மீண்டும் பிரபு தேவாவுடன் இணையும் விஜய் ?

தளபதி விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப் படத்தையடுத்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில்ராஜு தயாரிக்கிறார். 

இதையும் படிக்க | ஜெய் பீம்’ படத்துக்கு எதிராக பேசினாரா சந்தானம்?: ட்விட்டரில் ஆதரவாகவும், எதிராகவும் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு சேர உருவாகவிருக்கிறது. இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபு தேவா ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘மாரி 2’ படத்துக்காக பிரபு தேவா நடனம் அமைத்த பாடலான ரௌடி பேபி பாடல் யூடியூபில் 1 பில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>