மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப் பை விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை அமலில் உள்ளது. எனினும் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது ஆங்காங்கே தொடர்ந்து வருகிறது.

இதையும் படிக்க | பசியில் வாடும் ஏமன்: நிதியுதவியை குறைக்கும் ஐநா

இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் மீண்டும் மஞ்சப் பை எனும் விழிப்புணர்வு திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இதற்கான விழிப்புணர்வு இயக்கத்தை நாளை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>