முகப்பருக்களை விரட்டும் இயற்கை வழிமுறைகள்!

face_pimples

பெண்கள் பெரும்பாலானோருக்கு உள்ள பெரும் பிரச்னை முகப்பரு. சருமத்தின் அழகைக் கெடுக்கும் முகப்பருக்களை விரட்ட பலரும் பல வழிகளை கையாளுகின்றனர். எனினும் முகப்பருக்களை இயற்கை முறையில் நீக்குவதே சிறந்தது. 

எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிக மன அழுத்தம், ஹார்மோன் சுரப்புகளில் மாற்றம், சரும பராமரிப்பின்மை உள்ளிட்டவை முகப்பரு ஏற்பட காரணமாகிறது. 

இதனை இயற்கையாக வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு எவ்வாறு சரிசெய்வது என பார்க்கலாம்..

முகப்பருக்களை விரட்ட எலுமிச்சைச் சாறை பயன்படுத்தலாம். எலுமிச்சைச் சாறை அப்படியே பயன்படுத்தாமல் அத்துடன் சில துளிகள் நீர் சேர்த்து பருக்களின் மீது தடவி வரலாம். 

முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தில் உள்ள அழுக்குகளை மற்றும் இறந்த செல்களை நீக்குவதால் முகப்பருக்களை விரட்ட பயன்படுத்தலாம். 

லாவண்டர் எண்ணெயை பருக்களின் மீது தொடர்ந்து தடவி வந்தால் பருக்கள் விரைவில் மறைந்துவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகரை முகத்தில் தடவ பருக்கள் மறையும். 

அதேபோல கிரீன் டீயை ஆற வைத்து முகத்தில் தடவிவர பருக்கள் நீங்கும்.

<!–

–>