முகம் பளபளப்பாக இருக்க…

ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் ஏ,டி, இ, கே, பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. ஆலிவ் எண்ணெய் உடலில் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.

உயர் ரத்த அழுத்தத்தையும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு உடல்நலம் சார்ந்த நன்மைகள் இருக்கின்றன. சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகுக்கும் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். 

ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் செல்கள் புத்துணர்ச்சி அடையும். சருமம் பொலிவு பெறும். சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை வறண்டு விடாமல் பாதுகாக்கும். 

ஒரு கிண்ணத்தில் சிறிது ஆலிவ் எண்ணெயுடன் 1 ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து இந்த கலவையை முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் மிருதுவாய் பளபளக்கும்.

கண்களைச் சுற்றியுள்ள கரு வளையங்கள், சுருக்கங்களை போக்குவதற்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதுதவிர, ஆலிவ் எண்ணெய் முகப்பருக்களை மறைய வைக்கிறது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>