முதன்முறையாக கார்த்திக்கு ஜோடியாகும் சமந்தா?

பேச்சுலர் பட இயக்குநர் சதிஷ் செல்வகுமார் தற்போது கார்த்தி நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிக்க | தல தோனியுடன் சீயான் விக்ரம்: எதற்காக இந்த சந்திப்பு?

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் கார்த்தியை பேச்சுலர் பட இயக்குநர் சதிஷ் செல்வகுமார் சந்தித்து கதை ஒன்றை கூறியிருக்கிறார். அந்த கதை நடிகர் கார்த்திக்கு பிடித்துவிட்டதாகவம் விரைவில் இந்தப் படம் குறித்து அவர் முடிவெடுப்பார் என்றும் கூறப்பட்டது. 

சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வருவாய் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>