முதலிரவில் என்ன செய்வார்கள்?: கேள்வி கேட்டு ஆச்சர்யப்படுத்திய நடிகை

லவ் யூ ரச்சூ என்கிற கன்னடப் படத்தில் நடித்துள்ளார் நடிகை ரச்சிதா ராம்.

2013 முதல் கன்னடப் படங்களில் நடித்து வரும் ரச்சிதா, லவ் யூ ரச்சூ படத்தில் அஜய் ராவுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் காதல் காட்சிகள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர் பதில் அளித்ததாவது: 

இங்குப் பலரும் திருமணம் செய்தவர்களாக உள்ளீர்கள். உங்களை யாரும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. பொதுவாக முதலிரவில் என்ன செய்வார்கள்? ரொமான்ஸ் தானே செய்வார்கள்! அதுதான் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. காதல் காட்சிகளில் நான் நடிப்பதாக இருந்தால் அதற்குக் காரணம் இருக்கும். படத்தைப் பார்க்கும்போது அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வீர்கள் என்றார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>