முதல் டெஸ்ட்: ஷுப்மன் கில் அரை சதம், உணவு இடைவேளையில் இந்தியா 82/1

 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயரும் நியூசி. அணியில் ரச்சின் ரவீந்திராவும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்கள். 

இந்திய அணியில் மீண்டும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள் ஷுப்மன் கில்லும் மயங்க் அகர்வாலும். அதிக ரன்கள் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அஜாஸ் படேலின் முதல் ஓவரில் ஷுப்மன் கில் ஆட்டமிழந்திருக்க வேண்டும். எல்பிடபிள்யூ முறையீட்டைத் தவறவிட்டதால் நியூசி. அணியால் ஷுப்மன் கில்லின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுக்க முடியாமல் போனது. ஒரு ரன் கூட எடுக்காதபோது, நடுவர் அளித்த அவுட் ஒன்றை டிஆர்எஸ்- சில் முறையீடு செய்து தப்பினார் ஷுப்மன் கில். காலை வேளையில் ஜேமிசன் அற்புதமாகப் பந்துவீசி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தார். எனினும் ஷுப்மன் கில்லும் புஜாராவும் நெருக்கடியைச் சமாளித்து நன்கு விளையாடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இந்திய அணியில் மீண்டும் விளையாடி வரும் ஷுப்மன் கில், 81 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரை சதத்தைக் கடந்தார்.

முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 29 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 52, புஜாரா 15 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>