முதல் நாளே ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா : வெளியான புதிய ப்ரமோ

24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 30) பிரம்மாண்டமாகத் துவங்கியது. நிகழ்ச்சியின் போது போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். ஜுலி, வனிதா, தாமரை செல்வி, சுஜா வருணி, ஷாரிக், நிரூப், ஸ்ருதி அபிநய், அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி , பாலா, சினேகன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். 

போட்டியாளர்கள் அனைவருக்கும் பிக்பாஸில் முன் அனுபவம் இருப்பதால் போட்டி முதல் நாளில் இருந்தே அனல் பறக்கிறது. முதல் ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார். அதில் தான் பங்கேற்க மாட்டேன் என வனிதா வெளியில் செல்கிறார். 

இதையும் படிக்க | இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து பிரபல இயக்குநர் தகவல்

பின்னர் மீண்டும் விளையாட்டில் பங்கேற்கும் வனிதாவை ஷாரிக் தடுக்க, நான் வருவேன் என அவருடன் மல்லுக்கு நிற்கிறார். ஷாரிக் உறுதியாக இருக்க போடா என்று அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>