முதல் நாள்: முதல் விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் ஜோகன்னஸ்பர்கில் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. விராட் கோலி காயம் காரணமாக விளையாடாததால், கேப்டன் பொறுப்பை கே.எல். ராகுல் ஏற்றார். டாஸ் வென்ற ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ராகுல் 50 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜான்சென் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவன் ஆலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையும் படிக்கஇந்தியா 202 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கர், எய்டன் மார்கிரம் களமிறங்கினர். சிறப்பாகப் பந்துவீசிய முகமது ஷமி, மார்கிரமை (7) எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

இதன்பிறகு, கேப்டன் எல்கருடன் இணைந்து கீகன் பீட்டர்சென் பாட்னர்ஷிப் அமைத்தார். முதல் நாள் ஆட்டம் முடியும் வரை இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 18 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து இன்னும் 167 ரன்கள் பின்தங்கியுள்ளது.

எல்கர் 11 ரன்களுடனும், பீட்டர்சென் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>