மும்பை அபார்ட்மெண்டைப் பெரிய தொகைக்கு விற்ற ஹர்பஜன் சிங்

 

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அபார்ட்மெண்டை ரூ. 17 கோடிக்கு விற்பனை செய்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

2017-ல் மும்பை அந்தேரியில் 9-வது மாடியில் உள்ள 2,830 சதுர அடி அபார்ட்மெண்டை ரூ. 14.15 கோடிக்கு  வாங்கினார் ஹர்பஜன் சிங். 

இந்நிலையில் அந்த அபார்ட்மெண்டை ரூ. 17.58 கோடிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு ஹர்பஜன் சிங் விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக மும்பையில் சொகுசு அபார்ட்மெண்ட்களை வாங்குபவர்கள் அதிகமாகி விட்டதாகவும் அதனால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனது அபார்ட்மெண்டை நல்ல விலைக்கு ஹர்பஜன் விற்றுவிட்டதாகத் தெரிகிறது. 

ஹர்பஜன் சிங் – நடிகை கீதா பஸ்ரா ஆகிய இருவரும் 2015-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இத்தம்பதியருக்கு 2016-ல் மகளும் இந்த வருட ஜூலை மாதம் ஆண் குழந்தையும் பிறந்தன. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>