முருங்கைக் காய் மந்திரம்!

201712141437163927_1_keerai

உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் முருங்கைக் கீரை 

முருங்கைக் கீரையில் நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

முருங்கை இலையை (1 கைப்பிடி) அளவு எடுத்து, அதனை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிதளவு தேன், சிறிதளவு மிளகுத் தூள் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கி, காலை வேளையில் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து, இதயம் சீராக இயங்கும்.

தினந்தோறும் இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள சுண்ணாம்புச் சத்து ரத்தக் குழாய்களைத் தளர்த்தி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு :

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

<!–

–>