முள்ளங்கியின் 5 முக்கிய பலன்கள்

முள்ளங்கியைப் பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் முள்ளங்கி மருத்துவ குணங்கள் அதிகமுள்ள ஒரு அருமருந்து. இதில் தாதுக்களும் வைட்டமின்களும் அதிகம் உள்ளது. விலை குறைவாகக் கிடைக்கும் இந்த முள்ளங்கியின் பலன்களைப் பார்க்கலாம்.

  1. முள்ளங்கியைச் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, மாவுச் சத்து நன்றாக செரிமானம் ஆகிவிடும். கொழுப்புச் சத்தும் நன்றாக ஜீரணமாகும். தவிர ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் சேர்வதை முள்ளங்கி தடுக்கும்.
  2. முள்ளங்கிச் சாறு மூல நோயைக் குணப்படுத்தும். சிறுநீரக கற்கள் பிரச்னையில் அவதிப்படுபவர்களுக்கு முள்ளங்கி முழு நிவாரணம் தரும். முள்ளங்கியை நன்றாக வேக  வைத்து, அந்த நீரை வடிகட்டிக் குடித்து வர சிறுநீரக கற்கள் முற்றிலும் கரைந்து போகும்.  
  3. தொண்டை வலி, நாவறட்சி போன்ற பிரச்னைகளைத் தீர்க்க வல்லது முள்ளங்கி. 
  4. முள்ளங்கியிலுள்ள கந்தக சத்து பித்தநீரை நன்றாகச் சுரக்கச் செய்யும். கல்லீரல் பிரச்னைகள் இருந்தால் அதுவும் குணமாகும்.  
  5. முள்ளங்கி சாறு எடுத்து இளம் சூட்டில் காலையில் குடித்து வர நல்ல குரல் வளம் கிடைக்கும். பேச்சு தெளிவாக வரும்.                  ​

இன்னும் நிறைய பலன்கள் முள்ளங்கியில் உள்ளது. அடிக்கடி உணவில் முள்ளங்கியைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மருத்துவமனை இருக்கும் திசைக்கு கும்பிடு போடலாம்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>