முள் செடிகள் நிறைந்த காட்டுப்பகுதியில் வேகமாக பயணிக்கும் அஜித்: வைரலாகும் விடியோ

நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

இந்த நிலையில் இந்தப் படத்தையடுத்து மீண்டும் நடிகர் அஜித், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி புதிய படத்துக்காக இணையவுள்ளது. இந்த நிலையில் நடிகர் அஜித் தற்போது தனது பைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார். 

இதையும் படிக்க | ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…: புதுப்பட அறிவிப்பை வெளியிட்ட சூர்யா

சமீபத்தில் இந்திய எல்லையில் ராணுவ வீரர்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. மேலும் பாலைவனம் ஒன்றில் பைக்கின் முன் அமர்ந்து ஓய்வெடுக்கும் விடியோவும் வைரலாக பரவியது.

இந்த நிலையில் பைக்கில் பயணம் செய்யும் விடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில் முள் செடிகள் நிறைந்த காட்டுப் பகுதியில் நடிகர் அஜித் தனது பைக்கில் வேகமாக சென்று கொண்டிருக்கிறார். இதனை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>