‘முழு ஊரடங்கில் சென்னை புறநகர் ரயில்கள் இயங்கும்': தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நாளில் சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நேற்று (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தோட்ட தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலி: அரசாணை வெளியிட வலியுறுத்தி ஆா்பாட்டம்

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை ரயில்வே கோட்டமேலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஞாயிற்றுக்கிழமை சென்னை புறநகர் ரயில் சேவைகள் கரோனா கட்டுப்பாடுகளுடன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கூத்தாநல்லூரில் துணைக் கருவூலம் அமைக்க வலியுறுத்தல்

அதன்படி சென்னை – அரக்கோணம், சென்னை – கும்மிடிப்பூண்டி, சென்னை – வேளச்சேரி, சென்னை – செங்கல்பட்டு வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

பயணிகள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>