
ஆஸ்திரேலியாவுடனான ஆஷஸ் 3-வது டெஸ்ட் ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் 3-வது ஆட்டம் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து தொடக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டும் அணிக்கு அது பலனளிக்கவில்லை. ஹசீம் ஹமீத் (0), ஸாக் கிராலே (12) ஆகியோரை கம்மின்ஸ் வீழ்த்தினார்.
இதன்பிறகு, டேவிட் மலான் மற்றும் ஜோ ரூட் இந்தத் தொடரில் மீண்டும் ஒருமுறை பாட்னர்ஷிப் அமைத்தனர். மலான் நிதானம் காட்ட ரூட் சற்று துரிதமாக ரன் சேர்த்தார்.
எனினும், இந்த இணையால் இந்த முறை பெரிய பாட்னர்ஷிப்பை அமைக்க முடியவில்லை. 14 ரன்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார் மலான்.
இதையும் படிக்க | தென்னாப்பிரிக்காவில் முதல் சீரிஸ் வெற்றியை பெறுமா இந்தியா?: இன்று முதல் ஆட்டம் தொடக்கம்
இதன்பிறகு, பென் ஸ்டோக்ஸுடன் இணைந்து மீண்டும் துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் அரைசதத்தை எட்டினார். ஆனால், அரைசதம் அடித்த கையோடு மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, ஸ்டோக்ஸும் 25 ரன்களுக்கு கேமரூன் கிரீன் பந்தில் ஆட்டமிழந்தார். கடந்த ஆட்டத்தில் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லரும் 3 ரன்களுக்கு நாதன் லயான் சுழலில் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்.
சற்று முன்பு வரை இங்கிலாந்து அணி 54 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
ஜானி பேர்ஸ்டோவ் 27 ரன்களுடனும், மார்க் வுட் 4 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கிரீன், லயான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–
–>