மேட்டூர் அணை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 31 நாட்களுக்கு நீட்டிப்பு

மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

இதையும் படிக்க | தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி: மா.சுப்பிரமணியன்

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டில் ஆகஸ்ட் 1-ம்தேதி முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று மாலை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட வேண்டும். 

மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு காலத்தை 16.12.2021 முதல் 15.01.2022 வரை  31நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | உ.பி.யில் ராகேஷ் டிகைத்துக்கு உற்சாக வரவேற்பு: வேளாண் போராட்ட வெற்றி எதிரொலி

நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 600கன அடி வீதம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>