மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 75.63 அடியிலிருந்து 76.48 அடியாக உயர்ந்தது.  

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,118 கன அடியிலிருந்து 12,168 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 38.53டி எம் சி யாக இருந்தது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>