மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'மரைக்காயர்' பட டீசர் இதோ

மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் மரைக்காயர். இந்திய கடற்படை எள்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக மரைக்காயர் உருவாகியுள்ளது. 

இந்தப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜூன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன் , சுஹாசினி, கல்யாணி பிரியதர்ஷன், மோகன்லாலின் மகன் ப்ரணவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது.

இதையும் படிக்க | சிம்புவுக்கு வெற்றி கொடுக்குமா இந்த ‘மாநாடு’ ?: படம் எப்படி இருக்கிறது ? திரைப்பட விமர்சனம்

இந்தப் படத்துக்கு சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த படம், சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்தப் படம் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>