யுவன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால்

 

யுவன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடிகர் விஷால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விஷால் நடித்து வரும் ‘வீரமே வாகை சூடும்’ சண்டைக் காட்சிகள் அதிகம் நிறைந்த படமாக அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசரே அதற்கு நல்ல உதாரணம்.

இந்தப் படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை து.பா.சரவணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரித்துள்ளார். 

இதையும் படிக்க | என்னது ‘வலிமை’ பட பின்னணி இசை யுவன் இல்லையா ? : வேறு இசையமைப்பாளரா ?

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இதனை புகைப்படத்துடன் அறிவித்த நடிகர் விஷால், ”யுவன் இசையில் மனம் மயக்கும் வீரமே வாகை சூடும் படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகும்” என்று அறிவித்துள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>