யு-19 உலகக் கோப்பை: இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள 17 போ் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் தமிழக வீரர் மானவ் பராக் இடம்பெற்றுள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகளில் வரும் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பைப் (யு-19 உலகக் கோப்பை) போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தில்லி வீரா் யாஷ் துல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா். ஆந்திரத்தின் எஸ்.கே. ரஷீத் துணை கேப்டனாக செயல்படுவாா். தமிழக முன்னாள் வீரர் எஸ். ஷரத் தலைமையிலான தேர்வுக்குழு இந்திய அணியைத் தேர்வு செய்துள்ளது. 

இந்திய யு-19 அணி

யாஷ் துல் (கேப்டன், தில்லி), ஹா்னூா் சிங் (சண்டிகர்), அங்கிரிஷ் ரகுவன்ஷி (மும்பை), எஸ்கே.ரஷீத் (துணை கேப்டன், ஆந்திரா), நிஷாந்த் சிந்து (ஹரியாணா), சித்தாா்த் யாதவ் (உத்தரப் பிரதேசம்), அனீஷ்வா் கெளதம் (கர்நாடகம்), தினேஷ் பனா (விக்கெட் கீப்பர், ஹரியாணா), ஆராத்யா யாதவ் (விக்கெட் கீப்பர், உத்தரப் பிரதேசம்), ராஜ் அங்கத் பாவா (சண்டிகர்), மானவ் பராக் (தமிழ்நாடு), கௌஷல் டாம்பே (மஹாராஷ்டிரா), ஹங்கரேகா் (மஹாராஷ்டிரா), வாசு வட்ஸ் (உத்தரப் பிரதேசம்), விக்கி ஓஸ்ட்வால் (மஹாராஷ்டிரா), ரவிக்குமாா் (பெங்கால்), கா்வ் சங்வான் (ஹரியாணா).

மேலும் 5 மாற்று வீரா்களும் அறிவிக்கப்பட்டுள்ளனா். ரிஷித் ரெட்டி (ஹைதராபாத்), உதய் சஹரன் (பஞ்சாப்), அன்ஷ் கொசாய் (செளராஷ்டிரம்), அம்ரித் ராஜ் (பெங்கால்), பிஎம் சிங் ராத்தோர் (ராஜஸ்தான்). 2000, 2008, 2012, 2018 என நான்கு முறை உலக சாம்பியனான இந்தியா வரும் ஜன. 15-இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் ஆட்டத்தில் பங்கேற்கிறது. 19-ல் அயர்லாந்து, 22-இல் உகாண்டாவுடன் விளையாடுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன. மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

உலகக் கோப்பைப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. 48 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.

இந்திய யு-19 அணியில் மானவ் பராக் என்கிற தமிழக இளைஞர் இடம்பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2016-ல் வங்கதேசத்தில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றார். 18 வயது மானவ், லயோலா கல்லூரியில் பயில்கிறார். ஆப் ஸ்பின்னரான மானவ், பேட்டிங்கிலும் திறமையை வெளிப்படுத்தி ஆல்ரவுண்டராக உள்ளதால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MANAV (@manav_parakh)

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>