யு-19 உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி

 

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு -19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி முன்னேறியது.

மேற்கு இந்தியாவில் நடைபெற்று வரும் யு-19 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் யாஷ் துல் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்களை இந்திய அணி குவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் யாஷ் 110 ரன்கள், ஷேக் ரஷித் 94 ரன்கள் குவித்தனர்.

தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக லஷ்லன் ஷா 51 ரன்கள் எடுத்திருந்தார்.

இதன்மூலம், 96 ரன்கள் வித்தியாசத்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணி நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப் போட்டியில், ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி விளையாடவுள்ளது.அசத்தினாா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>