ரசிகர்களுக்கு சவால் விடுத்த சமந்தா: வைரலாகும் இன்ஸ்டாகிராம் விடியோ

 

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இந்த எந்த பிடிமானமும் இல்லாமல் எழுந்திருக்கும் சேலஞ்ச் ஒன்றை தனது நண்பர் தனக்கு கொடுத்ததாகவும், அதனை வெற்றிகரமாக செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களையும் அதனை செய்யுமாறும் சேலஞ்ச் விடுத்துள்ளார். 

புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா பாடல் விடியோ சமீபத்தில் யூடியூபில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. அந்த பாடல் படத்துக்கு பெரும் வரவேற்புக்கு காரணமாக அமைந்தது. 

இதையும் படிக்க | நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கரோனா

சமந்தா தற்போது தமிழில் டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் படம், ஹாலிவுட்டில் ஒரு படம் என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தான் உடற்பயிற்சி செய்யும் விடியோவை அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்களுக்கும் ஊக்கமளித்து வருகிறார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>