ரஜினிகாந்த்தின் அண்ணாத்த டிரெய்லர் வெளியானது !

 

சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கீர்த்தி சுரேஷ் அவரது தங்கையாக நடித்துள்ளாராம். மேலும், மீனா, குஷ்பு, சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>