ரஹானே, புஜாரா நேருக்கு நேர் மோதல்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்த அஜின்க்யா ரஹானே மற்றும் சேத்தேஷ்வர் புஜாரா ஆகியோர் முறையே மும்பை மற்றும் சௌராஷ்டிரா ரஞ்சி கோப்பை அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் மூத்த வீரர்களான சேத்தேஷ்வர் புஜாரா மற்றும் அஜின்க்யா ரஹானே ஆகியோர் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால், அணியில் அவர்களது இடம் கேள்விக்குள்ளானது. இருவரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி ரன் குவிக்க வேண்டும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்தார்.

இதையும் படிக்கசாதி, மத பாகுபாடின்றி ஏழைகளுக்கு இலவச உணவளிக்கும் கர்நாடக முஸ்லிம்!

இந்த நிலையில், ரஞ்சிக் கோப்பைக்கு பிரித்வி ஷா தலைமையில் மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரஹானே பெயர் இடம்பெற்றுள்ளது. இதேபோல சேத்தேஷ்வர் புஜாராவும் சௌராஷ்டிரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரஞ்சி கோப்பை முதல் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 17-ம் தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இதில் ரஹானே இடம்பெற்றுள்ள மும்பை மற்றும் புஜாரா இடம்பெற்றுள்ள சௌராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>