ரஹ்மான் இசை, வடிவேலு நகைச்சுவை – பிரம்மாண்டமாக தயாராகும் உதயநிதி, மாரி செல்வராஜ் படம்

 

உதயநிதி ஸ்டாலின் தற்போது ஆர்டிக்கிள் 15 படத்தின் தமிழ் பதிப்பான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் குறித்து நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் மற்றும் நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. 

இதையும் படிக்க | ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமான தமிழ் திரைப்பட இயக்குநர் : உருக்கமான பதிவு

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாகவும், நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>