ராகவா லாரன்ஸின் ருத்ரன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

காஞ்சனா வரிசைப் படங்களை தவிர ராகவா லாரன்ஸின் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் ருத்ரன், துர்கா போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

இதில் ருத்ரன் படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கி வருகிறார்.  இதில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்து வருகின்றனர். 

இதையும் படிக்க | பிக்பாஸ் வருணின் அம்மாவும் சின்னத்திரை பிரபலமா ? வெளியான தகவல்

காஞ்சனா படத்துக்கு பிறகு இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சரத்குமார் இணைந்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>