ராக்கியில் நயன்தாராவா? விக்னேஷ் சிவன் வெளியிட்ட புதிய தகவல்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ராக்கி திரைப்படத்தின் ப்ரோமோ விடியோ நாளை (திங்கள்கிழமை) வெளியாகவுள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

அருண் மாதேஸ்வரனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராக்கி. வசந்த ரவி மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். சிஆர் மனோஜ் குமார் படத்தைத் தயாரித்துள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் படத்தை வெளியிடுகிறது. 

படத்தின் டீசர், டிரெய்லர் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. இது வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தின் ப்ரோமோ விடியோ நாளை வெளியாகவுள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>