ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர்: டிரெய்லர் எப்போது?

ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் டிரைலர் திரையரங்குகளில் நாளை (வியாழக்கிழமை) காலையும், சமூக ஊடகங்களில் மாலையும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ (ரத்தம்,ரணம்,ரௌத்திரம்) படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். தமிழில் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் வெளியிடவுள்ளது. தமிழில் இந்தப் படத்துக்கு மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார்.

இதையும் படிக்க‘ஜெயில்’ திரைப்படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்

இந்தப் படத்தில் இருந்து உயிரே என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சில காரணங்களால் முன்னோட்டம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் டிரெய்லர் வெளியீடு குறித்த புதிய அறிவிப்பை படக் குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் திரையரங்குகளில் காலை 10 மணிக்கும், யூட்யூபில் மாலை 4 மணிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அடுத்த பெரிய படமாக உருவாகி வருவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் உள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>