ரோஹித் சர்மா அவுட்டா?: நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள ரசிகர்கள்!

rohit1_review1

மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. இதனால் இன்றைக்கும் விஜய் சங்கர் 4-ம் நிலை வீரராகக் களமிறங்கவுள்ளார். மே.இ. அணியில் ஆஷ்லி நர்ஸ், எவின் லூயிஸுக்குப் பதிலாக சுனில் அம்ப்ரிஸ், ஃபெபியன் ஆலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

5 ஓவர்கள் வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோச் வீசிய அடுத்த ஓவரில், ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்தார் ரோஹித் சர்மா. ஆனால் கடைசிப் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

முதலில் நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இதையடுத்து டிஆர்எஸ் முறையீடு செய்தார் மே.இ. அணி கேப்டன். அதில் அவுட் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவு கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் என பலரையும் அதிருப்திக்கு ஆளாக்கியது. 

பந்து பேட்டுக்கும் பேடுக்கும் இடையில் சென்றது. விடியோவில் பார்க்கும்போது பந்து எதில் முதலில் பட்டது என்பது குழப்பமாக இருந்தது. ஆனால் பேட்டில் பட்டுத்தான் பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது என்பது தெளிவாக இல்லை. இதனால் மூன்றாவது நடுவர், சந்தேகத்தின் அடிப்படையில் நாட் அவுட் என்றே அறிவித்திருக்க வேண்டும் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துகளைக் கூறியுள்ளார்கள். நடுவரின் முடிவைக் கண்டு ரோஹித் சர்மா மட்டுமல்லாமல் அவருடைய மனைவி ரித்திகாவும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார். 

<!–

–>