லக்னெள அணியில் கே.எல். ராகுல்?: பிசிசிஐ விதிகளை முன்வைக்கும் பஞ்சாப் அணி உரிமையாளர்

 

பஞ்சாப் அணியில் மேலும் விளையாட விருப்பம் இல்லை என அந்த அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் தெரிவித்ததால் அவரைத் தக்க வைக்க முடியாமல் போய்விட்டது. மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங் என இருவரை மட்டும் பஞ்சாப் அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

இதனால் ஐபிஎல் 2022 போட்டியில் வேறொரு அணியில் விளையாடப் போகிறார் கே.எல். ராகுல்.     

2020 ஐபிஎல் போட்டியில் அஸ்வினுக்குப் பதிலாக கே.எல். ராகுல், பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பேட்டிங்கில் அவர் சிறப்பாக விளையாடினாலும் தனது அணியை பிளேஆஃப்புக்குக் கொண்டு செல்லத் தவறினார். தற்போது, ஐபிஎல் போட்டியில் புதிதாக இடம்பிடித்துள்ள லக்னெள அணியில் கே.எல். ராகுல் இடம்பெறப் போகிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பஞ்சாப் இணை உரிமையாளர் நெஸ் வாடியா பேட்டியளித்ததாவது:

கே.எல். ராகுலைத் தக்கவைக்க விரும்பினோம். ஆனால் அவர் ஏலத்தில் பங்கேற்க விருப்பப்பட்டார். அதற்கு முன்பு இன்னொரு அணி அவரை அணுகியிருந்தால் அது நெறிமுறையற்றது. லக்னெள அணி ராகுலை அணுகியிருக்க மாட்டார்கள் என எண்ணுகிறோம். இது பிசிசிஐயின் விதிகளுக்கு முரணானது என்றார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>